Breaking
Sun. May 19th, 2024
(எம்.ரீ. ஹைதர் அலி)
கல்குடாத்தொகுதியின் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாசிக சாலைக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சர்வேஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேற்று 2016.09.16 ஆந்திகதி வாசிகசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாசிகசாலையினால் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயம், பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம், மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயம், மீராவோடை உதுமான் வித்தியாலயம், மீராவோடை அமீர் அலி வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் நன்மையடைவதாகவும், இம்மாணவர்களின் அறிவு ஆற்றல் விருத்திக்கான கல்வி சார்ந்த புத்தகங்கள் பல தேவைப்பாடாக உள்ளதாகவும், நாளாந்தம் பத்திரிக்கை செய்திகளை பார்வையிட வருபவர்களின் தொகையும் அதிகமாக காணப்படுவதனால், தளபாட வசதிகளின் தேவைப்பாடும் இருப்பதாகவும் வாசிகசாலை பொறுப்பாளரினால் மாகாண சபை உறுப்பினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாசிகசாலைக்கு தேவைப்பாடாக காணப்படும் புத்தகங்களின் விபரங்களை பட்டியலிட்டு தனக்கு வழங்குமாறும் அதனை பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததோடு, வாசிகசாலையினையும் பார்வையிட்டார்.unnamed-11
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சர்வேஸ்வரன், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி, வாசிகசாலையின் பொறுப்பாளர் கமால்தீன், பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் வாசிகசாலையின் ஊழியர் அப்துல் சமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.unnamed-10
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *