பிரதான செய்திகள்

டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை

2017-2019 ஆம் ஆண்டு தேசிய டிப்ளோமா கற்பித்தல் டிப்ளோமாதாரர்களை ஆசிரியர் சேவைக்காக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 2017-2019 ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவுகளை முடித்த பயிற்சியாளர்களுக்கும், கடந்த ஆண்டுகளில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அவர்களின் தகவல் சேகரிப்பு இணைய வழி ஊடாக மேற்கொள்ளப்படும்.

நாளை (17) நண்பகல் 12.00 மணி முதல் குறித்த நியமனங்களுக்கான தகவல் சேகரிப்பு இணையத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் இணையத்தளமான ncoe.moe.gov.lk இல் 25.03.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி சமர்ப்பிக்க முடியும்.

Related posts

விஷேட விமானம் மூலம் கொழும்பு செல்லும் விஜயகலா

wpengine

வவுனியாவில் கல்வி தொடர்பான உதவி தொடர்புகொள்ளுங்கள்

wpengine

ஊடகவியலாளரை அச்சுருத்திய வவுனியா கிறிஸ்தவ பாதிரியார்

wpengine