Breaking
Fri. May 10th, 2024

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. 

முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ஓட்டங்கள், மணீஷ் பாண்டே 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் யாஷ் துல் (2), ரோவன் பாவெல் (4), லலித் யாதவ் (2) என சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழந்ததால் அணியின் ரன்ரேட் சரிந்தது. மறுமுனையில் வார்னர் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

வார்னருடன் இணைந்த அக்சர் பட்டேல், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஓட்டம் குவித்தார். 

22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் கடந்த அக்சர் பட்டேல் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வார்னர் 51 ஓட்டத்திலும், குல்தீப் யாதவ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் பாரெல் ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் சரிந்தன. 

கடைசி ஓவரில் அன்ரிட்ஜ் நோர்ட்ஜே 5 ஓட்டம் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரிலே மியர்டித் 2 விக்கெட் எடுத்தார். 

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் , ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இனைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். 

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்த போது இஷான் கிஷன் 31 ஓட்டங்களுக்கு ரன் அவுட் ஆனார். 

அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து திலக் வர்மா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் சர்மா 65 ஓட்டங்களில் வெளியேறினார். 

கடைசி 3 ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் , கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி , சிக்ஸர் பறக்க விட்டனர். கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணி முதல் வெற்றி பதிவு செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *