இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன் நகர புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி சாதிக் கான் லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்றார். அங்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார் சாதிக் கான்.
சில நாட்களுக்கு முன் தான் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டார்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
லண்டனில் இருக்கும் இந்தியர்களுடன் நெருக்கமான உறவை பராமரித்து வரும் சாதிக் கான், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுடன் நல்லுறவை பராமரிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.