பிரதான செய்திகள்

சம்பந்தன் எதிர்க்கட்சியில் செயற்பட முடியாது டளஸ் அலகபெரும

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சியில் செயற்பட முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதனை தொடர்ந்து அவரால் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் செயற்பட முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்காக நாடாளுமன்றத்தினுள் நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாறு நம்பிக்கை வெளியிட்ட விடயம், ஒரு இடத்தில் அவரால் உச்ச நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் செயலாக காணப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகபெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

wpengine

ஹோட்டலில் ஊழியரை தாக்கிய பாலித தெவரபெரும (விடியோ)

wpengine

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

wpengine