பிரதான செய்திகள்

‘கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்’ – கஜேந்திரகுமார்!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல பிரதேச செயலகங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. எனினும், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமாகின்றன.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலா கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த தாமதமாகின்றமைக்கான காரணம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

மகிந்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகளை போல் தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது.

Maash

இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார்.

wpengine

மன்னார் நகர பிரதேச செயலாளரின் பொது மக்களுக்கான அறிவித்தல்

wpengine