பிரதான செய்திகள்

கருணாவின் பிறந்த நாள்! பால்சோறு வினியோகம்

முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் 51வது பிறந்த தினம் நேற்று  கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் ஆதரவாளர்களால் பாற்சோறு வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிரான் பிள்ளையார் கோவில் முன்பாக இடம்பெற்றது.
இதில், கட்சி உறுப்பினர்களான எஸ்.உதயகுமார், துரைசிங்கம், மித்திரன், கண்ணன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பாதசாரிகள், பொதுமக்கள் எனப் பலருக்கும் பாற்சோறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சிறிய கட்சிகள் ரணில் அணியில்

wpengine

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

wpengine