பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு லச்சம் பேருக்கு விரைவில் வாழ்வாதாரம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு

இந்த வருட முடிவுக்குள்  நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான  நிறுவனங்கள்   ஊடாக வாழ்வாதர உதவிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் புதுக்கம கிராமத்த்கில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் (25) அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது

சொந்தமாகவும் சுயமாகவும் மக்கள் மக்கள் வாழ வேண்டும் என்பதட்காகவே இவ்வாறான ஆக்க்பூர்வமான திட்டங்களை அமைச்சு நடைமுறை படுத்தி வருகின்றது நாடு முழுவதும் இந்த திட்டம் விஸ்த்ரிக்கப்படுவதுடன் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வாழ்வாதர உதவிகளை வழங்கி வருகின்றோம்

இந்த அமைச்சினை மீண்டும் பொறுப்பு ஏற்ற பின்னர் வாழ்வாதார உதவிகளை  அதிகரிக்க உதவுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று கொண்டிருக்கிறார்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலே நாம் பல்வேறு ஆக்க பூர்வமான  நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அதனை மேலும் வியாபிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்

அந்த வகையில் வீடற்றோருக்கான பிரச்சினையை தீர்ப்பதற்கு  நடவடிக்கை  எடுத்து வருகின்றோம் என்றார்

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ரஞ்சன், இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Related posts

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்.

Maash

மே 23 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

wpengine

அளுத்கம இனக்கலவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்;ஹிஸ்புல்லாஹ்

wpengine