Breaking
Thu. May 2nd, 2024

சீனாவில் தன்னுடைய தாயின் மாற்று கருப்பை மூலம் கர்ப்பமடைந்த தாய், வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் சேன்ஸ்கி மாகாணத்தை சேர்ந்த 26 வயதான யாங் ஹுவா என்கிற தாய், கடந்த 2015ம் ஆண்டு தன்னுடைய 22 வயதில் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் ஒருமுறை கூட மாதவிடாய் எடுத்திராக யாங் ஹுவாவிற்கு கருப்பையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், மாற்று கருப்பை பொருத்தினால் மட்டுமே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட யாங் ஹுவாவின் தாய், தன்னுடைய மகள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும் எனக்கூறி, கருப்பையை தானம் செய்ய முன்வந்துள்ளார்.

அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை மாற்றி பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் 33 வார கர்ப்பிணியாக இருந்த யாங் ஹுவா, பெண்களுக்கு அரிதாக வரும் MRKH நோய்க்குரியால் பாதிக்கப்பட்டிருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

வெளியில் இருந்து பார்க்க அவருடைய பிறப்புறுப்பு இயல்பானதாக இருந்தாலும், குழந்தை பிறப்பதற்கு சாத்தியமில்லாமல் இருந்துள்ளது.

உடனே அவருக்கு 1 மணிநேரம் 6 நிமிடம் அறுவை சிகிச்சை செய்து, அழகிய ஆண் குழந்தையை வெளியில் எடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷிஜிங் வைத்தியசாலை நிர்வாகம், 2 கிலோ எடை மற்றும் 48 செமீ அளவில் குழந்தை பிறந்தது. தற்போது நல்ல உடல்நலத்துடனே உள்ளமையும் குறிப்பிடதக்கது.

முன்னதாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் 13 பெண்கள் குழந்தை பெற்றிருப்பதுவும் விசேட அம்சமாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *