அராஜக அரசியல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடு

  • கந்தளாய் – தம்பலகாமம் மற்றும் கிண்ணியா பிரதேச விவசாயிகள் தங்களின் விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தினை பெற்றுத்தறுமாறு கோரி இன்று (17) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

கந்தளாயிலுள்ள அனைத்து விவசாயிகளும்,விவசாயச் சங்கங்களும் ஒன்றிணைந்து இவ் கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

கந்தளாய் பேராத்துவெளி ஜூம்மா பள்ளிவாசல் தொடக்கம் கந்தளாய் நகர் ஊடாக கந்தளாய் குளக்கட்டு வரையில் நடை பவனியூடாக இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு விவசாயம் மேற்கொள்ள உரத்தினை பெற்றுத்தா, அராஜக அரசியல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடு போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு,கொடும்பாவிகளும் எரித்து எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares