Breaking
Tue. May 7th, 2024

மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலையினை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான  றிப்கான் பதியுதீன் அவர்களினால் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான் , மற்றும்  யு என் ஹெபிடேட் நிறுவனத்தினால் 4,200,000 டொலர்கள் பெறுமதியான தொகையில் இப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகள் அனைத்தும் கொண்டு நவீன முறையில் மீள்குடியேற்ற கிராமங்களில் உள்ள  பாடசாலைகளில் முதல் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது

அனைத்து வசதிகளும் கொண்டு அமைக்கப்பட்ட இப்பாடசாலை திறப்புவிழாவின் போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள்

” மன்னாரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது சொந்த இடங்களில் மீள் குடியேறிவரும் இடங்களில் ஒன்றாக காணப்படும் இந்த கிராமத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இந்த பாடசாலை
குடிநீர் வசதி ,மலசலகூட வசதி ,விளையாட்டு மற்றும் நிவீன்யா முறையில் அமைக்கப்பட்ட வகுப்பறைகள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் முயட்சியினால்
பான்கிமூன் அவர்களின் உதவியின் மூலமாக 5 வருடங்கள் கழித்து இந்த பாடசாலை கட்டப்பட்டு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களை இந்த கிராமங்களுக்கு நாங்கள் பாடசாலையினை பார்வையிட வருகை தந்த பொது சாதாரண ஒரு கொட்டிலில் ஒழுங்கான   கதிரை வசதிகள்கூட இன்றி இப் பாடசாலை இயங்கி வந்தது ஆனால் இன்று நகரப்பகுதிகளையும் மிஞ்சிய வசதிகளுடன் இந்த பாடசாலை அமைந்திருப்பது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

இப் பாடசாலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கடின முயட்சியிலும் பலரது கடின உழைப்பிலும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பாடசாலை என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் எனவே மாணவ செல்வங்களாகிய நீங்கள் இந்தப் பாடசாலையில் சிறந்த கல்வியை கற்க வேண்டும் நல்ல ஒரு புத்தி ஜீவிகளாகவும் பட்டதாரிகளாகவும் வர வேண்டும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கும் நாம் இந்த கல்வி மூலமே எமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மாத்திரம் கற்றுக்கொடுக்காமல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்றுக்கொடுங்கள் அதே போன்று பெற்றோர்களும் தனது பிள்ளைகளை கழிவியின் பக்கம் அதிக கவனம் செலுத்த வையுங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல கல்வி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் உங்கள் பிள்ளைகளிடம் நாளாந்தம் நடைபெறும் விடயம் என்ன என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்”  எனவும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *