பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் “தமிழ்வின்” செய்தி தளம்! கூர்மையான ஆயும் எதுவுமில்லை

மன்னார், தராபுரம் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.  காலை 6 மணி முதல் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முுடிகின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை வழமைக்குக் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் அனைத்து இடங்களிலும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக மன்னார், தராபுரத்திலும் இரண்டாவது தடவையாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சில ஊடகங்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது குறித்து மன்னார் செய்தியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மன்னார் தராபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன் போது தராபுரத்தில் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் இருப்பதாகவும், பாதுகாப்புத் தரப்பினர் அந்த வீட்டையும் சோதனையிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தராபுரத்தில் சோதனை நடவடிக்கைகளை, அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீடு சோதனை என்ற வகையிலும்,சில கூரிய உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும்  சில இனவாத ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

அந்தப் பிரதேசத்தில் ஏனைய வீடுகளை சோதனையிட்டு, அமைச்சரின் வீடு சோதனையிடப்படாதிருந்தால், அதுகுறித்தும் விசமத்தனமான பிரச்சாரங்களை இந்த ஊடகங்கள் முன்னெடுத்திருக்கும் என பிரதேசவாசியொருவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, குரோதப் பிரசாரங்கள் முன்னெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

Related posts

ரவிக்கு பின்னால் பல ஊழல் புள்ளிகள்! ரணில் பதவி விலக வேண்டும்.

wpengine

மன்னாரில் விழிப்புணர்வு கலந்துரையாடல்

wpengine

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

Editor