Breaking
Sun. Nov 24th, 2024

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கருணா மேடைகளிலே அம்பாறை மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப் போகிறார்கள் என்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.நிச்சயமாக கருணா தான் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் செயலைச் செய்யப் போகின்றார்.

கடந்த தேர்தலில் நாங்கள் 45 ஆயிரம் வாக்களுக்கு மேல் பெற்றிருந்தோம். கடந்த தேர்தலை விட பத்தாயிரம் வாக்குகள் குறைவாக நாம் பெறுவோமானால் அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு.அதாவுல்லாவை நாடாளுமன்ற பிரதிநிதியாக்குவதற்கு மேடை பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இழிவுப்படுத்துகின்றார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சி. இவை அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாமல் செய்வதற்கான கபடநாடகம்.அவர்களுடன் இணைந்து பெரும்பான்மை கட்சிகளுக்கு சோரம் போன தமிழர்களும் விஷமத்தனமான முயற்சிகளை பல்வேறு மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுக்கு பின்னால் நிற்பவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வாழ்வதற்கு வழியின்றி அட்டை போன்று மாற்றுக் கட்சியினரை பற்றிப்பிடித்து வயிற்றுப் பிழைப்பை நடத்துகின்றனர்.

எங்களது பிரதேசங்களில் அடையாளம் தெரியாத புதிய முகங்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் வாக்குகளை சூறையாடுவற்கான சதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தங்களது மக்களின் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்காக வரவில்லை.இந்தத் தேர்தல் கால சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிலரின் வயிற்றுபிழைப்பு நடத்துவதற்காக மாற்று கட்சி வேட்பாளர்களை, மாற்று இனத்தவரை எமது பிரதேசங்களுக்குள் அழைத்து கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது? எதை செய்தது? என்ற விடயத்தை எங்களது மக்கள் மத்தியில் வைத்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.எமது கட்சியினர் இந்த நாட்டில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை அவை சார்ந்த விடயங்களிலும் அங்கம் வகிக்கவில்லை.நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலமிக்க ஒரு போராட்டம் இருந்தது அந்தப் போராட்டம் தற்போது மௌனிக்கப்பட்டுள்ளது.

அந்தக்காலம் தொட்டு தற்போதுவரை அரசாங்கம் பல்வேறுபட்ட கெடுபிடி வேலைகளை செய்தது.நாங்கள் அவர்களோடு பயணித்தால் கடந்த காலத்தில் அவர்கள் செய்த அட்டூழியங்கள், கொலைகள் என்பது சரி என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில்தான் பார்க்கப்படும்.அதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மதிநுட்பமான எமது மக்களின் உரிமை சார் பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கு கடந்த காலங்களில் செயற்பட்டது.ஆனால் இப்பொழுது அந்த ஒற்றுமையை சீர்குலைத்து அதற்காக ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை துதிபாடும் செயல்திட்டத்தை தான் இங்கு உள்ள சிங்கள மாற்று தமிழ் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் எங்களை குறி வைத்து முஸ்லிம்களை நாங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் என இங்கு பேசப்படுகின்றது.நாங்கள் எந்த விடயத்தில் சோரம் போனவர்கள். நாங்கள் அன்று முதல் இன்று வரை ஜனநாயக ரீதியாகத் தான் செயற்பட்டு வருகின்றோம். நமது மாவட்டத்தில் முகவர்களாக வந்துள்ள சிலருக்கு தகுந்த பாடங்களை நாங்கள் புகட்ட வேண்டும்.அம்பாறை மாவட்டத்திற்கு கூலி தொழிலுக்காக வருகை தருபவர்கள் வீரவசனம் பேசும் கருணாவின் ஊரிலிருந்து தொழிலுக்காக அம்பாறைக்கு வந்த அப்பாவி தமிழர்களே முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

குறிப்பாக சம்மாந்துறை பிரதேசத்தில் நைனாகாடு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கருணாவின் சொந்த ஊரிலிருந்து வருகை தந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். கருணாவின் சகோதரி முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் இவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வு பெறாமல் இங்கு வந்து எங்களைதான் மிக மோசமாக பேசும் நிலைமை இருக்கின்றது.

எம்மை பேசிப்பேசியே அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.நம்மையும் நம் மக்களையும் மண்ணையும் காட்டிக் கொடுத்துவிட்டு நயவஞ்சக சிந்தனையோடு செயற்படுகின்ற ஒருவரை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா என்ற கேள்வியை தொடுக்கின்றேன்.

அரசாங்கத்திற்கு மிகச் சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.எம்மை சின்னாபின்னமாக்கினால் அவர்களுக்கு எந்த கஸ்ரமும் இல்லை. இதனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதில் களம் இறக்கப்பட்டவர் தான் கருணா என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *