பிரதான செய்திகள்

ஹோமாகம நீதிமன்றில் குழப்பம் விளைவித்த 6 பிக்குகள் பிணையில் விடுதலை!

ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதியின்மையை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகளின் செயலாளர், உள்ளிட்ட 6 பிக்குகள் உட்பட மேலும் ஐவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 11 பிக்குகள் கைது செய்யப்பட்டதோடு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் தவிர்ந்து மேலும் ஐவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலை செய்யப்பட்டோரில், ராவண பலய அமைப்பினல் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அக்மீமண தயாரத்ன தேரரும் உள்ளடங்குகின்றனர்.

ஒவ்வொருவரும் தலா ரூபா 5 லட்சம் கொண்ட ஒரு சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவை, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க வழங்கினார்.

குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் 29ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பி.பீ ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என்று சமல் ராஜபக்ச வலியுறுத்த விடுத்தார்.

wpengine

விக்னேஸ்வரனின் செயற்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்

wpengine

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine