ரிசாத் பதியுதீனின் கைது முஸ்தீபு நீதிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கலங்கமாகும்!

ரிம்சி ஜலீல்-

நீதியும் நியாயமும் 2015 க்கு முன் குழிதோண்டி புதைக்கப்பட்டது போன்று இன்று அதை ஆட்சியில் நீதியும் நியாயமும் குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது ரிசாத் பதியுதீனின் கைது முஸ்தீபு நீதிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கலங்கமாகும். சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடாத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு முடிவுகட்ட ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் (MA) தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்பொழுது ஆட்சி பீடம் ஏறிய இருக்கின்றவர்கள் 2015 க்கு முன்னர் அரங்கேற்றிய பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் இன்று மீண்டும் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு கையொப்பம் இடவில்லை என்பதற்காக முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா அவர்கள் அந்தப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் இப்படி எத்தனையோ அரசியல் பழிவாங்கள்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அன்று நீதிக்கு ஏற்பட்ட அதே களங்கம் இன்றும் ஏற்பட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். “தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நிரபராதிகளையும் கட்சித்தலைவர்களையும் சிறைப்படுத்தி குற்றவாளியாக்க முனைவதும், ஊடகங்களைப் பயன்படுத்தி போலியான குற்றச்சாட்டுகளை சோடித்து முழு சமூகத்தையும் குற்றவாளியாக காட்ட முனைவதும் எதிர்காலத்தில் ஒரு மோசமான அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணக்கூடும் என நாம் அதிகம் கவலைப்படுகின்றேம்.

தனது தந்தையின் அடக்க ஸ்தலத்தை 36 மில்லியன் ரூபா செலவில் கட்டிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு சட்டம் அகதியாக சென்ற பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்காக 9 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துவிட்டு மீண்டும் அதனை அரசாங்கத்திற்கே திருப்பிக் கொடுத்த ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு வேறொரு சட்டமா என்று கேட்டுக விரும்புகிறேன்?

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares