Breaking
Sat. Apr 27th, 2024

றிசாட்பதியுதீனுக்கு ஜும்ஆத் தொழுகையின்பின்னர் பிராத்தனை செய்யுங்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வேண்டுகோள்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை நீங்க வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பிராத்தனையில் ஈடுபடுமாறும் தேவயற்ற விமர்சனங்களை செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இந்த காலகட்டம் முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களுக்கு சவால் நிறைந்த கால கட்டமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வடக்கிலே இருந்து இடம் பெயர்ந்தவர்களில் 12000 முஸ்லிம் மக்களின் ஜனநாயக வாக்குரிமையை உறுதிப்படுத்த பாடுபட்டவர் என்பதை இந்த தேசம் நன்கு அறியும்.

வடக்கிலே இருந்து இடம் பெயர்ந்த 12000 முஸ்லிம் மக்களின் ஜனநாயக வாக்குரிமையை உறுதிப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கை இந்த தேசத்தின் பாரிய குற்றமாக பார்க்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.

கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வடபுல முஸ்லிம்கள் வாக்களிப்பதற்காக அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வந்தன.

அந்த நடைமுறையில் தான் 2019ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதிபதி தேர்தலின் போதும் இந்த ஒழுங்கு பின்பற்றப்பட்டது.

ஆனால் இம் முறை சற்று வித்தியாசமாக 2019ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வாக்;களிக்க மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட போக்குவரத்துச் செலவான 9 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட அமைப்பு திருப்பி செலுத்தியது.

இந்த விடயம் அன்றைய பிரதமர், மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் இடம் பெற்றுள்ளதை நாடு நன்கு அறியும்.

இது தொடர்பில் கடந்த காலங்களில் எங்களது அகில இலங்கை மக்களின் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீனை பாதுகாப்பு பிரிவினர் பல அழுத்தங்களை கொடுத்து பல தடவைகள் குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு அழைத்து விசாரணைகளை மேற் கொண்டு முடிவுறுத்தப்பட்டிருந்;த நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தினை பூதாகரமாக்கி தேசத்துரோகி போல காட்டமுனைவதானது பெரும்பான்மை சமூகத்தினை திருப்திப்படுத்த எடுக்கும் செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் தலைவர்;களாலும் பேரினவாத சக்கதிகளினாலும் இவைகள் பிரச்சாரம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் றிசாட் பதியுத்தீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கையானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கும் எடுக்கும் முஸ்தீவு என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது..

பேரினவாதிகள் இதனை பூதாகராமாக்கி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஆதரவை தேட எத்தனிக்கின்றார்கள் என்பதை பெரும்பான்மை சமூகத்தின் கல்வியலாளர்கள், நடு நிலையான அரசியல் தலைவர்கள் அறிவாளிகள் சாதரண பொது மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

இந்த நிலையில் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களாகிய நாம் மிகப் பொறுமையோடு நடந்து கொள்வதுடன் றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரீட் மனு எதிர் வரும் நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் விடுதலையாவதற்கு பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தக் கால கட்டத்தில் தேவையற்ற விதத்தில் முக நூல்களின் சமூக வலைத்தளங்களில் எழுத வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *