பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின்பாவனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்


ஊடகப்பிரிவு

மின்பாவனை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முசலி பிரதேசத்துக்குட்பட்ட புதிய குடியேறியுள்ள அலக்கட்டை சேர்ந்த கிராமங்களான அகத்திமுறிப்பு,பொற்கோணி வேப்பங்குளம்,பிச்சவாணிபங்குளம்,கொண்டாச்சி குடியேறியுள்ள புதிய கொண்டச்சி போன்ற கிராமங்களிலுள்ள 79 நபர்கள் சிலாவத்துறை பொலிசாரினால் நேற்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்டனர்.


கைதுசெய்யப்பட்டவார்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி ஹுனைஸ்பாரூக் அவர்களும் மற்றும் சட்டத்தரணி சங்க உறுப்பினர்களும் சார்பாக ஆஜாரானர்கள்.


மறுபுரம் மின்சாரசபையினால் கொழும்பிலிருந்து சட்டத்தரணி ஒருவரும் ஆஜாராகியிருந்தனர்.
இதன்போது இம்மக்கள் இம்மின்சாரத்தை பொறுவதற்கான ஏதுக்கள் தொடர்பில் சட்டத்தரணி ஹுனைஸ்பாரூக் அவர்களினால் கெளரவ நீதவான் நீதிமன்றுக்கு விளக்கப்பட்டது.


இது மீள்குடியோற்ற கிராமாக இருப்பதனால் இங்கு மின்சாரத்தை பொற்றுக்கொடுப்பதில் பிரதேசசெயலகம், மின்சாரசபை போன்றவையின் இடித்தடிப்பும், காலதாமதமும் மற்றும் இக்கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சில காணிளுக்கான முறையான உறுதிபத்திரம் வழங்காமை போன்ற காரணங்களினாலும் மின்சாரத்தை பெறுவதில் ஏற்பாட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் கெளரவ நீதவான் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து.


கைதுசெய்யப்பட்ட 79 நபர்களையும் பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டியதற்கிணங்க கெளரவ நீதவான் அவர்களினால் கைதுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.


இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு மீண்டும் மே மாதம் 21ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித எதிர்பார்ப்பின்றி செயற்பாட்ட சட்டத்தரணி ஹுனைஸ்பாரூக் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு எதிராக செயற்படும் பிரதேச செயலாளர்

wpengine

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்பு

wpengine

வவுனியா பள்ளிவாசல் கடை தொகுதி எரிந்து நாசம்! காரணம் வெளியாகவில்லை

wpengine