Breaking
Mon. May 13th, 2024

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், ரிஷாட் எம்.பிக்கு மான நஷ்டம் ஏற்படுத்தும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஒளிபரப்பிய 03 ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும்,
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், எதிர்வரும் மே 05 ஆம் திகதி வரையில் குறித்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் எம்.பி யினால் தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்ட வழக்கு இன்று (22) கொழும்பு மாவட்ட நீதிமன்றில், பிரதான மாவட்ட நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தக் கட்டாணை பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம் தீவிரவாதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டை தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ஸ அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக அவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *