Breaking
Sun. May 12th, 2024

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுமென தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுடன் வேட்புமனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் வெளியானதும், பொதுத் தேர்தல் தொடர்பான ஏற்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தபால் மூல வாக்களிப்பு, தபால் மூல வாக்களிப்பிற்கான தினம், வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டுப்பணம், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான முடிவுத் திகதி போன்ற விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல்கள் விடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.


பொதுத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வருடம் இடம்பெறும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்புத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு இலட்சத்து 71 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இடாப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கென சுமார் 6 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் மில்லியன் ரூபா வரை செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *