உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி!

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்துக்குள்ளனது.

இதில், ரெயிலில் பயணித்த 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி மொஹ்சின் சைல் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

wpengine

முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது! எம்.கே. சிவா­ஜி­லிங்கம்

wpengine

உமாஒயா திட்டத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் பாதிப்பு

wpengine