Breaking
Sat. May 4th, 2024

சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதியின் சோதனை புத்தகத்தை அறிமுகப்படுத்தவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பஸ் விபத்துக்கள் இந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக எரந்த பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

A B

By A B

Related Post