Breaking
Fri. May 3rd, 2024

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 27 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

A B

By A B

Related Post