பிரதான செய்திகள்

உயர்தர பரீட்சையில் தோல்வியடைந்த பிரபல அரசியல்வாதி

இன்று வெளியான க. பொ. த உயர்தர பரீட்சையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சித்தியடையத் தவறியுள்ளார்.


சட்டத்தரணியாகும் கனவில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய ரஞ்சன் ராமநாயக்க பரீட்சையில் தோல்வியடைந்துள்ளார்.

தனது பரீட்சை பெறுபேறுகளை ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய அவர்,

அரசியல் S

தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் S

கிறிஸ்தவம் F

ஆங்கிலம் A

பொது அறிவு 50 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பெறுபேறுகளுக்கமைய சட்டக்கல்லூரியில் கற்கும் வாய்ப்பை ரஞ்சன் ராமநாயக்க இழந்துள்ளார்.

56 வயதான ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தர பரீட்சை எழுதியமை பலருக்கும் முன்னூதாரணமாக அமைந்திருந்ததாக பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

wpengine

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – முன்னால் அமைச்சர்

wpengine

வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்” தொழில் சங்கத்திடம் கோரிக்கை

wpengine