பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு கோத்தபாய ஆதரவு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையிலான வியத் மக அமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாம் பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

வியத் மக அமைப்பின் பணிப்பாளர் சபை அதிகார பூர்வமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைப் பிரகடன நிகழ்வில் வியத் மக அமைப்பும் பங்கேற்கவுள்ளது.

அரசியல் விவகாரங்களில் இறங்கப் போவதில்லை என பல தடவைகள் கோத்தபாய ராஜபக்ச மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

wpengine

வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்! ஏன்

wpengine

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine