Breaking
Sun. May 19th, 2024

பத்தே நிமிடங்களில் புற்று நோய் திசுக்களை கண்டறியும் கையடக்க கருவி ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இக் கருவியானது மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் மட்டுமல்லாது துல்லியமாகவும் புற்றுநோய் கட்டிகளை கண்டறிய உதவுவதோடு அறுவை சிகிச்சைகளுக்கும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் புற்று நோய் சிகிச்சைக்கு பின்னரோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ புற்றுநோய் திசுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்து விடும் என்ற அச்சம் இனி இல்லை என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் அணுக்களின் தனிப்பட்ட வளர்சிதை மாற்றத்தை இந்த “மாஸ்பெக் பேனா” சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது.

அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இப் பேனாவால் ஒரு துளி நீர் உட் செலுத்தப்படும் போது உயிரோடு இருக்கும் புற்றுநோய் செல்களில் உள்ள இரசாயனம் இந்த நீர்த்துளியில் நுழையும் வேளையில் அந்த இரசாயனம் கலந்த நீர்த்துளி ஆய்வுக்காக பேனாவால் உறிஞ்சப்படும்.

ஓவ்வொரு நொடிக்கும் பல்லாயிரக்கணக்கான இரசாயனங்களை அளவிடக்கூடிய ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்றழைக்கப்படும் நிறமாலைமானியுடன் பேனா பொறுத்தப்படும்.

பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு கிடைக்கப்பெறும் இரசாயன ரேகைகள் ஆரோக்கியமான திசுக்களா அல்லது புற்று நோய் தொற்றுள்ள திசுக்களா என வைத்தியருக்கு தெரியப்படுத்தும் என்கின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *