பிரதான செய்திகள்

வைத்தியர் சாபீயிடம் கருத்தரித்த இரண்டு சிங்கள பெண்கள்

குருணாகல் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த டொக்டர் சஹாப்டீன் சாபீக்கு எதிராக குற்றம் சுமத்திய இரண்டு பெண்கள் கருத்தரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


டொக்டர் சாபீயிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் தாம் குழந்தை பாக்கியத்தை இழந்து விட்டதாக முறைப்பாடு செய்த பெண்களே இவ்வாறு கருத்தரித்துள்ளனர்.

சிங்கள பௌத்த பெண்களுக்கு டொக்டர் சாபீ கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த இரண்டு பெண்கள் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் தொடர்பு கொண்டு, தாங்கள் கருத்தரித்துள்ளதாகவும் இதனால் முறைப்பாடு குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை.

என கூறியதாகவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

15 வயதுக் காதலியை தனது 37 வயது நண்பனுடன் உறவு கொள்ள வைத்த காதலன்!!

Maash

கடனை திருப்பிச் செலுத்தாத ஹொரவ்பொத்தானை வேட்பாளர் கைது .

Maash

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – பத்து பெண்கள் இரு ஆண்கள் விடுதலை .

Maash