பிரதான செய்திகள்

வீதிகளில் குப்பைகளை கொட்டவேண்டாம் மன்னார் நகர சபை செயலாளர்

(பிராந்திய செய்தியாளர்) 

தற்பொழுது மன்னார் நகர சபை பகுதிக்குள் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாரத்தில் இரு தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இனிவரும் காலங்களில் வீதிகளில் குப்பைகளைப் போட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாதப்படி நடந்து கொள்ளுமாறு மன்னார் நகரசபை செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைகாலமாக வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாபெரும் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் நகரசபை செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் பொது சௌக்கிய சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் உதவிகளுடன் மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொலிசார், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இவ் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த 13.03.2017 தொடக்கம் 19.03.2017 வரை இடம்பெற்ற இவ் சிரமதான பணிகள் பள்ளிமுனை, உப்புக்குளம், மூர் வீதி, பெற்றா, சின்னக்கடை, சாவற்கட்டு, கடலேரி வீதி, பெரியகடை, பனங்கட்டுகொட்டு, எமில்நகர், சாந்திபுரம், சவுத்பார், பெரியகமம், எழுத்தூர், பட்டித்தோட்டம், கீரி ஆகிய பகுதிகளிலே இடம்பெற்றன.

இவ் சிரமதானப் பணியின்போது குப்பைகள் அகற்றப்பட்டதுடன் வடிகால்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பராமரிப்பில் இல்லாத காணிகளிலும் வீதியோரங்களிலும் உள்ள பற்றைகள் அகற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சில இடங்களில் கான்களை மூடி அதன்மேல் வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட்டவைகள் இனம் காணப்பட்டு பொலிசாரின் உதவிகளுடன் அவைகள் அகற்றப்பட்டு சீர்செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தற்பொழுது மன்னார் நகர சபை பகுதிக்குள் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாரத்தில் இரு தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இனிவரும் காலங்களில் வீதிகளில் குப்பைகளைப் போட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாதப்படி நடந்து கொள்ளுமாறு மன்னார் நகரசபை செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பொதுமக்களை வேண்டியுள்ளார்.

Related posts

“அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வதை விட பொதுவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்”

wpengine

மன்னார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பணிப்பகிஸ்கரிப்பு

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine