Breaking
Thu. Apr 25th, 2024

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் உள்ள Dhaka என்ற நகரில் நசீமுதீன் சமாத் என்ற 28 வயதான மாணவர் ஒருவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் படித்து வருகிறார்.

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நாத்திகரான இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி மதங்களை பற்றியும் கடவுள்களை பற்றியும் தவறாக கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதம் பற்றியும் இறை தூதரை பற்றியும் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பிய அவரை ஒரு மர்ம கும்பல் நடுரோட்டில் மடக்கியுள்ளது.

அப்போது, ‘அல்லா தான் சிறந்த கடவுள்’ எனக் கோஷமிட்ட அந்த கும்பல் நசீமுதீன் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை அந்த கும்பல் துப்பாக்கியாலும் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நசீமுதீனின் நண்பர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ‘நசீமுதீன் 6 வயது முதல் விடுதிகளில் தங்கி தான் படித்து வந்தார். மதம், கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. அடிக்கடி துணிச்சலாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த உலகம் தோன்றியது பரிணாம வளர்ச்சியால் தான் என்றும், இதில் கடவுளுக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டார்.

நசீமுதீனிக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததால், அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு அடிப்பணிந்து கடந்த மாதம் பேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார்.

ஆனாலும், அவரது கருத்துக்களும் கொள்கைகளும் இன்று அவரது உயிரை பறித்துவிட்டது’ என வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *