பிரதான செய்திகள்

விஸ்வா வர்ணபாலவின் பதவி யாருக்கு? அவசர மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விஸ்வா வர்ணபால மறைந்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு புதிய ஒருவரை நியமிப்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு 07.00 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதோடு, இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

wpengine

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை

wpengine

இராணுவத் தளபதி மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம்

wpengine