Breaking
Thu. Apr 25th, 2024

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்
பதவியில் இருந்து லெசில் டி சில்வா நீக்கப்பட்டுள்ள நிலையில்  ஹக்கீம் பற்றி பொய்யான தகவல்கள் வழங்கியதானாலேயே பாரிய ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் நீக்கம் ?

ஹக்கீம் பற்றி பொய்யான தகவல்கள் வழங்கியதானாலேயே பாரிய ஊழல்
ஆணைக்குழுவின் செயலாளர் நீக்கம் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா அந்தப் பதவியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளர்.

நேற்று சீலோன் டுடே பத்திரிகைக்கும் வேறு சில இலத்திரணியல் ஊடகங்களுக்கும் அமைச்சர்
ஹக்கீம் முன்னர் நீதி அமைச்சராக இருந்தபோது உலக வர்த்தக மையத்தில் நீதி அமைச்சின்
தேவைகளுக்காக ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி இல்லாமல்
கட்டிடம் பெற்றுக்கொண்டதாக தவறான தகவல்களை இவர் வழங்கியிருந்தார்.
இக்கட்டிடத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடனே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சுக்கு
பெற்றுக்கொடுத்தார். சுமார் 15 வருட கால அமைச்சு நிர்வாக அனுபவமுள்ள தன்னை தன்மீது வீனான அவதூறுகளை கட்டவீழ்த்திவிடும் சில விசமிகளின் முயற்சிகளே என அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில இணைய ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி
பரவியிருந்தது. குறித்த செய்தியின் உண்மை தன்மை தொடர்பில் அறிய மடவளை நியுஸ் ஜனாதிபதி காரியாளய அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது … அமைச்சர் ஹக்கீம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக தலவல்களுக்காக செயளாலர் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை முன்னாள் செயளாலர் கோரிய வரப்பிரசாதங்கள் தொடர்பான சிக்கலே இதற்க்கு பிரதான காரணம் என குறிப்பிட்ட அவர்.
இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ள இணையதள முக நூல் பாவனையாளர்கள் குறித்த செய்தியை நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்வாறன செய்திகளால் சகோதர சமூகங் கள் தொடர்பாக தவறான புரிதல்கள் உருவாகலாம்
என குறிப்பிட்டார். பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பதவியில் இருந்து லெசில் டி சில்வா நீக்கப்பட்டமையானது அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர் என்பதற்காகவே என லங்கா ஈ நியுஸ் செய்தி
வெளியிட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *