பிரதான செய்திகள்

விமலுக்கெதிரான ஜே.வி.பி. இன் வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்ண இன்று அறிவித்துள்ளார்.

“நெத்த வெனுவட்ட எத்த” உன்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளமைக்காக விமல் வீரவன்சவிடம் 100 மில்லியன் கோரி குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புலமைச்சொத்து சட்டத்தை மீறி  அச்சிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த”  என்ற நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு தடைவிதித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரம் கனவுகளுடன் இல்லறத்தை தொடங்கிய இளம் ஜோடி

wpengine

இலவு காத்த கிளியின் கதை போல் முடிந்த அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

wpengine

பாலி கடற்பரப்பில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி!

Editor