பிரதான செய்திகள்

விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு விதிக்கப்பட்ட இந்த இடைக்கால தடை நீடிப்பானது மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் அமுலாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மனுக்கள் மீதான விசாரணை நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மாட்டிக்கொண்ட மைத்திரி

wpengine

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

wpengine