Breaking
Sun. May 19th, 2024

கவிதைக்கும்
அதனை பிறசவிக்கும்
எழுத்துக்கும்
முதல் எதிரி
தன்னை மட்டும்
எழுத்துக்கு சொந்தக்காரனாக
ஏலம்விடுபவனே!

எழுத்துக்களுக்கு
தனிஈழம்
கோரும்
போதகர்களால்
கருவரையில்
கலைந்துபோகும்
புதிய சிந்தனைகளுடைய
எழுத்துக்கள் கோடி!

உனது எழுத்துக்களுக்கு
குரப்பிரசவத்தால்
அடகு மொழியில்
தனக்குத்தானே
பட்டம் சூட்டிய
எழுத்துக்காரர்களால்
தூக்கமில்லாத
தூற்றல்கள் வரலாம்!

இலக்கணம் பிழைக்கலாம்!
இடக்கரடக்கல் சருகலாம்!
முடிவுறை இல்லாமல்
முடிவடையலாம்!
கவிதைக்கு முகவரி தேவையில்லை!
அறிமுகமும் தேவையில்லை!

உன் உணர்களின்
எழுத்துக்களை
அசைவுகளை
மானிட உணர்வுகள்
உணர்கின்ற போது
சுவாசிக்கின்ற போது தான்
கவிதை பிறக்கிறது!

கவிதை
யாரும் பிரசவிக்க முடியாது
யாரும் உரிமைக்காரரும் இல்லை!
ஊரான் பிள்ளைக்கு
தன்பெயர் வைக்கும்
பாக்கியம் கவிதைக்கே துரதிஸ்டம்!

உன் சிந்தைகளை
சிறையிடாதே!
உன் எழுத்துக்களை
மௌனியாக்காதே!
இயலுமை உள்ளவரை எழுது!
சமூகத்தின் ஓரத்தில் நின்று
சராசரி மனிதனாக எழுது!
இலக்கியம் தேடும்
சமூகமயமாதல் வரை எழுது!

*கிண்ணி*
FAHMY Mohamed

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *