பிரதான செய்திகள்

வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்! ஏன்

வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்களில் தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் வைத்து வேன் ஒன்றில் வந்த சிலரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் இருந்து, வர்த்தகருடையது எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசி, பாதணிகள் உள்ளிட்ட பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

விவசாயிகளின் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க யோசனை!

Editor

துணைமருத்துவ சேவை பயிற்சி பயிலுநர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்!

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அங்கிகாரம் தமிழ் தவிசாளர்

wpengine