வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தின தொழில் மூலம் வருமானம் பெறும் சுமார் 2000 மேற்பட்ட குடும்பம்பங்களுக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் கையளிக்கபட்டு கடந்த வாரத்தில் இருந்து வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.
இவ் நிவாரண உதவி திட்டத்திற்கு புனர்வாழ்வ்வு புதுவாழ்வு அமைப்புடன் இணைந்து IMHO,அன்பாலயம் அவுஸ்ரேலியா,பேராதனைப் பல்கலைக் கழக 1980ம் ஆண்டு பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

