பிரதான செய்திகள்

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி

வரலாற்றிலேயே முதன்முறையாக வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிகள் வவுனியா – யங்ஸ்டார் மைதானத்தில் நாளை (30) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும், ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வாக ஆதிவாசிகளின் வரவேற்பு நடனம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழுவின் தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா களமிறங்கவுள்ளார்.

இவர்களுடன் மோதுவதற்கு, வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குழு ஆகியன மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

wpengine

13 இலட்சத்துக்கும் அதிகமான தொகையினை கோட்டாவுக்கு செலவிடும் அரசாங்கம்!

Editor

வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல்

wpengine