பிரதான செய்திகள்

வவுனியா வடக்கு கல்வி வலய இளம் பாடசாலை அதிபரின் பாலியல் துஷ்பிரயோகம்

பாடசாலை அதிபர் ஒருவர் மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் இளம் அதிபர் ஒருவரே இவ்வாறு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் குறித்த நபர் திருமணமானவர்  என்பதுடன் திருமணமாகி சிறிது காலத்திலேயே பாடசாலை மாணவி ஒருவருடன் வீட்டில் வைத்து தகாத முறையில் நடந்ததை நேரில் கண்ட அவரது  மனைவி அன்றுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலமையில் மேலும் பல மாணவிகளை இவர் தன் காமயிச்சைக்குள்ளாக்கியுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் தரம் 10 மாணவி ஒருவரை வவுனியா நகரிற்கு அண்மையில் உள்ள  தனது வீட்டிற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய வேளையில் மாணவியின் பெற்றோரினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டுள்ளதுடன்,அவர் பல  மாணவிகளுடன்  தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளது.

இத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கடமையாற்றும் பாடசாலையின் ஆசிரியை ஒருவருடனும் தகாதமுறையில் நடக்க முற்பட்ட வேளை கண்டிக்கப்பட்டிருந்ததாகவும் , இவர் தான் மட்டுமில்லாது வவுனியாவில் பிரபல வர்த்தகர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு வழங்கி வந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

குறித்த நபர் தனது முறைகேடான நடவடிக்கைகளுக்கு பிரபல வர்த்தகரின் சொகுசு வாகனமொன்றையும் பயன்படுத்தியதாக நேரில் பார்த்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சினை! இன்று ஹர்த்தால்

wpengine

பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது

wpengine

அம்பாறை கரும்பு, நெசவு உற்பத்தியாளர்களின் பிரச்சினை! றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

wpengine