பிரதான செய்திகள்

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் தேர்தல் இல்லை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதற்கட்டத் தேர்தலில் நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்துக்கும் தேர்தல் நடைபெறாத நிலை காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சை காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எல்லை மறுசீரமைப்பில் சர்ச்சைகள் காணப்படாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை முதற்கட்டமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும் இதன் கீழ் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களின் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்துக்கும் மேற்குறித்த முதற்கட்டத் தேர்தல் நடைபெற மாட்டாது என்று அறியக் கிடைத்துள்ளது.

முதற்கட்டத் தேர்தலின் போது உள்ளடக்கப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி வேட்பு மனுக் கோரப்படவுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related posts

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

wpengine

நிதியை செலவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை- ரணில்

wpengine

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகளால் வெற்றி

wpengine