Breaking
Fri. Apr 26th, 2024

மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதாகவும்  தான் கடற்படை அதிகாரியை திட்டியதாக கூறப்படும் விவகாரம் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சித்திரிக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை “ இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு ”  திட்டிய காணொளி இணையத் தளங்களில் பரவிவருகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் கடற்கடை அதிகாரியை திட்டிய வேகத்தில் திரும்பிய கிழக்கு மாகாண முதலமைச்சர் அருகில் நின்ற மாணவியின் கன்னத்திலும் எதிர்பாராத விதமாக அறையொன்றையும் விட்டார்.

இதையடுத்து தன்னை சுதாகரித்துக்கொண்ட மாணவி எதுவும் தெரியாதது போல் நிற்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

திருகோணமலை – சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஷீர் அஹமட் தெரிவிக்கையில்,

‘யாராக இருந்தாலும் மாகாணத்தின் நெறிமுறைகள் , கௌரவம் மதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இது தனிப்பட்ட ரீதியான பிரச்சினை இல்லை. மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதாகவும் , நான் பேசியதால் தனிப்பட்ட ரீதியாக புண்பட்டிருந்தால் மனம் வருந்துவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டியமை குறித்து கடற்படை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *