பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

கொரோனா வைலஸ் பாதிப்பு காரணமாக, முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, உலக வங்கியால் வழங்கப்பட்ட கைகழுவும் உபகரணங்கள், வவுனியா பிரதேச செயலகத்தில், நீண்ட நாள்களாகத் தேங்கிக் காணப்படுகின்றன.

மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக, உலக வங்கியால் வழங்கப்பட்ட குறித்த பொருள்கள் முன்பள்ளிகளுக்குப் பகிர்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், வவுனியா பிரதேச செயலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்படுவதற்கு, அரசியல்வாதிகள் காரணமாக உள்ளனரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள பல முன்பள்ளிகள் நிதி வசதியின்றி, போதுமான சுகாதார மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதேச செயலகத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக குறித்த பொருள்கள் தேங்கி கிடப்பது தொடர்பில், பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், குறித்த அமைச்சினூடாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

எனினும், அமைச்சினூடாகவே வழங்கப்பட வேண்டும் என தமக்கு தெரிவிக்கப்பட்டமையால், பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும்  திகதி தந்ததன் பின்னர் அவர்களினூடாக வழங்கி வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

Related posts

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் ஆளுநர் .

Maash

12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம்! பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு

wpengine