பிரதான செய்திகள்

வடமேல் மாகாணத்தில் வேகமாகப் பரவும் தோல் நோய்!

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால் நடைகளுக்கும் தற்போது வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ ஆகிய பிரதேசங்களில் உள்ள கால்நடைகளுக்கே தற்போது தோல் நோய் பரவி வருகின்றது.

இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிணை சட்டத்தை மீறிய டான் பிரசாத்! மீண்டும் கம்பி எண்ணும் நிலை

wpengine

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

wpengine

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

wpengine