பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ,றிப்ஹான் பதியுதீன் நடவடிக்கை எடுப்பார்களா?

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுக்குளம்,மேத்தன்வெளி,முசலி,புதுவெளி ,பிச்சைவாணிப நெடுங்குளம் பண்டாரவெளி,மணற்குளம் மற்றும் போன்றவற்றின் தற்போதைய நிலைமையை நேரடியாகப் பார்த்த போது மிகவும் கவலையாக உள்ளது.

இப்பிரதேச வீதிகள் 1990ற்கு முன் அகலமானதாகவே இருந்தன.இவ்வீதிகள் குளக்கட்டின் மேலாகவும்,அருகாமையிலும் அமைந்திருந்ததை யாவரும் அறிவர்.குளக்கட்டிற்கு இணையாகச் சென்ற வீதிகள் இல்லாதொழிக்கப்பட்டு குளக்கட்டு வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

(உ-ம்) புதுவெளி வீதி குளங்களை கொந்தராத்து எடுத்தவர்கள் குளக்கட்டை மிகவும் ஒடுக்கமாக அமைத்துள்ளமையால் வாகனங்கள் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதுடன் இரு வாகனங்கள் முந்திச்செல்ல இடம் வழங்க முடியாத நிலைமையும் உள்ளது.

ஆகவே, இப்பிரதேச வீதிகளின் உண்மை நிலைமைகளை வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் ஆகியோார்  இணைந்து நேரடியாக கள விஜயம் செய்து இவ்வீதியை சிறப்பாகப் புனரமைப்புத் தருமாறு பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related posts

வித்தியா கொலை! மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை

wpengine

பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிவிடுவேன்! அம்பிட்டிய சுமனரதன தேரர் எச்சரிக்கை

wpengine

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

wpengine