Breaking
Mon. May 6th, 2024

(அகமட் எஸ்.முகைடீன்)

சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபையை சம்பந்த்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும், எதிர்வரும் றமழானுக்கிடையில் சாய்ந்தமருது நகர சபை வழங்கப்படாது விடுமானால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவோம் என்று ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு அவரின் கோமாழித் தனத்தையும் எடுத்துக் காட்டுவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

சிராஸ் மீராசாஹிப் மேலும் தெரிவிக்கையில்:-

உண்மை என்னவென்றால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் முயற்சியினால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மண்றம் கிடைக்கும் காலம் வெகுவிரைவில் உள்ளது. றமழானுக்கிடையில் கிடைப்பதற்கான எந்தச் சாத்தியக் கூறும் இல்லை என்பதை நான் அறிந்தேன்.

இந்தச் செய்தியினை அறிந்த ஜெமீல் சாய்ந்தமருது மக்களின் அந்த அபிலாஷையானது தனது முயற்சியால் நடைபெற்றதாக மக்களுக்கு காண்பிப்பதற்காகவே குறித்த விடயம் தொடர்பாக இதுவரை காலமும் வாய் மூடி மௌனியாக இருந்த ஜெமீல் றமழானுக்கு முன்னதாக கிடைக்காவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம் செய்வதாக சொல்லுகிறார்.

இது ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சியே அன்றி வேறில்லை.

குறித்த சத்தியாக் கிரக போராட்டம் யாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக?, மொட்டையாக சம்பத்தப்பட்டவர்கள் என்றால் யார் அவர்கள்?, அமைச்சர் றிசாத் பதியுதீனா அல்லது அமைச்சர் றவூப் ஹக்கீமா?. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் வாக்குதியை நிறைவேற்றவில்லை எனத்தெரிவிப்பது. இச்சத்தியாக்கிரக போராட்டம் றவூப் ஹக்கீமின் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் காணப்படுகின்றது.

நடுநிலையாக பார்த்தால் அவரது அந்த சத்தியாக் கிரக போராட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரானதாக அமைய வேண்டும். ஏனெனில் றிசாத் பதியுதீன் ஜெமீல் சார்ந்த கட்சியின் தலைவராக இருப்பதோடு ஒரு கெபினட் அமைச்சராகவும் காணப்படுகின்றார்.

அது மாத்திரமன்றி கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் ஜெமீல் என்னிடம் தேசியப்பட்டியல் கேட்கவில்லை, அவர் சாய்ந்தமருதின் நகர சபை கோரிக்கையினை மாத்திரமே முன்வைத்து எமது கட்சியில் இணைந்து கொண்டார், அதனை தாம் வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

எனவே பூச்சாண்டி காட்டாது குறித்த கோரிக்கையின் வெற்றியினை துரிதப்படுத்த அவர் சார்ந்த கட்சியின் தலைமையினை வலியுறுத்துவதை விடுத்து வெறுமனே வீரவசனங்கள் பேசி மக்களை மடையர்களாக்க விளைய வேண்டாம்.

ஏதோ பெரும் அபிவிருத்திகளை சாய்ந்தமருதுக்கு செய்த ஒரு அரசியல்வாதி போன்று தன்னை அடையாளப்படுத்த முணையும் ஜெமீல் கல்முனை மாநகர சபையில் ஆரம்பித்த அவரது அரசியல் மாகாண சபை வரை சென்ற காலப்பகுதியில் குறிப்பிடும் படியாக எந்த ஒன்றையும் சாய்ந்தமருதுக்கோ அல்லது வேறு எந்த ஊருக்குமோ செய்தது கிடையாது. அவர் சாய்நதமருதுக்கு துரோகமே செய்தார். சாய்ந்தமருதுக்கு என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை தடுக்கவே முற்பட்டார். இதனை யாவரும் அறிவீர்கள்.

சாய்ந்தமருது மண் பெற்ற கல்முனை மாநகர பிதா என்ற அரசியல் அந்தஸ்தை இல்லாதொழிக்க செயல்பட்டார், ஜெமீல் ஒரு சில சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நெருக்குதலுக்குள்ளாக்கி சாய்ந்தமருது பெற்ற அந்த அந்தஸ்தை இழக்கச் செய்தார்.

அத்தோடு சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி அபிவிருத்தி செய்யப்பட்டபோது அதற்கான கொமிசன் ஜெமீலுக்கு கிடைக்கவில்லை என்று அந்த அபிவிருத்தியினை குறையில் நிப்பாட்டிய பெருமை ஜெமீலையே சாரும். சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை எனது முயச்சியால் வெற்றி பெறும் தறுவாயில் அதனை தடுத்து நிறுத்திய பெருமையும் ஜெமீலையே சாரும்.

தற்போதைய விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களினால் சாய்ந்தமருது பீச் பார்க் எனது காலப்பகுதிக்கு முன்னதாக அபிவிருத்தி செய்தபோது அதனையும் உடைத்தெறிந்தவர் இந்த ஜெமீல். இவ்வாறு ஜெமீல் சாய்ந்தமருதுக்கு இழைத்த தூரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சாய்ந்தமருதுக்கு தூரோகமிழைத்த வரலாற்றைக் கொண்ட ஜெமீல் தனது குள்ள நரி விளையாட்டை விடுத்து, இனியாவது சாய்ந்தமருது மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் அமைச்சர் றிசாத் பதியுதீனால் வழங்கப்பட்டுள்ள சுகபோகங்களுக்கு சோரம் போகாது, றிசாத் பதியுதீனை நெருக்குதலுக்கு உள்ளாக்கி ஆகக் குறைந்தது குறித்த கோரிக்கை வெற்றி பெறும் காலத்தை முற்படுத்துவதற்காகவாவது முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *