பிரதான செய்திகள்

வடக்கில் 42,000 வீடுகளில் ஈழத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர் -துணை தூதுவர்

இந்திய மத்திய அரசின் உதவியுடன் இலங்கையின் வடமாகாணத்தில் கட்டப்பட்டுள்ள 42,000 வீடுகளில் ஈழத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்சங்க மாநாடு ஒன்றில் பங்கேற்ற அவர் இத்தகவலை தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு, யாழ்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 4,000 வீடுகள் மற்றும் இந்திய வம்சாவழியினர் வசிக்கும் மலையகம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 4,000 வீடுகள் என மொத்தம் 8,000 வீடுகளும் விரைவில் தமிழர்களிடம் வழங்கப்பட உள்ளதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நடராஜன் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

வடமாகாண மின்பாவனையாளர்களுக்கான அறிவித்தல்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பரிபோனது கல்கிஸ்சை

wpengine

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

wpengine