கட்டுரைகள்பிரதான செய்திகள்

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு தனராஜின் நிலைமை!

(சித்தீக் காரீயப்பர்)

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன். அந்த நிகழ்ச்சியை இங்கு விமர்சிக்க நான் வரவில்லை. ஆனால், குறித்த நிகழ்ச்சியை நடத்துபவர்களில் ஒருவராக திகழும் நண்பர் தனராஜ் அவர்களின் நிலைமை கண்டு அடிக்கடி நான் வேதனைப்படுவேன். பாவம் அவர் பாவப்பட்ட ஜென்மமோ தெரியாது.

குறித்த அதிர்வு நிகழ்ச்சியை முஷாரப், தனராஜ் ஆகிய இருவருமே தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். ஆனால், முஷாரபின் கைதான் அங்கு ஓங்கி நிற்கும். பாவம் இந்த தனராஜ் ஒதுங்கியுள்ளாரோ ஒதுக்கப்பட்டுள்ளாரோ தெரியாது.

நிகழச்சியில் கலந்து கொள்ளும் பிரமுகர்களிடம் அதிகம் கேள்வி கேட்பவர் மற்றும் குறித்த கேள்விக்கு பிரமுகர் பதிலை முழுமையாகச் சொல்வதற்கு முன்னரே அடித்து விழுந்து இன்னொரு கேள்வியை இடையில் கேட்பவர் என்றெல்லாம் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுபவர் முஷாரப்தான்.

ஆனால் தம்பி தனராஜ் பாவம்… குறித்த நிகழச்சியில் நேயர்கள் யாராவது கேள்வி கேட்டால்.. நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்…? சற்றுச் சத்தமாகப் பேசுங்கள்…. உங்கள் பெயரைச் சொல்லுங்கள்… கொஞ்சம் சுருக்கமாக கேள்வியைக் கேளுங்கள் என்று கூறுவதும் நேயர்களின் முகநூல் ஊடான கேள்விகளை பிரமுகர்களிடம் தொடுப்பதுதான் தம்பி தனராஜின் அதிர்வு நேர ரொஸ்டர் டியூட்டியில் பிரதான கடமைகள் ஆகிவிட்டன. தப்பித் தவறி நிகழ்ச்சியின் இறுதியில் ஓரிரு கேள்விகளுக்கு அவர் அனுமதிக்கப்படுவது அவருக்கு கிடைக்கும் உச்சமட்ட போனஸ் ஆக உள்ளது.

சரி முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டால் முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெரிந்தவர் என்பதால் தம்பி முஷராப் பேசுவதில் தவறில்லை என்று சும்மா.. சும்மா… சொல்லிக் கொள்வோமே.

ஆனால், இன்று (19) ஒலிபரப்பான அதிர்வு நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தனி மனிதனாக கலந்து கொண்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களே! அவரிடம் கூட தம்பி முஷராப்தான் கேள்வி கேள்வியாக தொடுத்தார். ஐ.நாவிலிருந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை வரை வினவினார்

ஆனால், ஒரு தமிழர் என்ற வகையில் அவரது சமூகத்தைச் சார்ந்த விடயங்களை, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, உண்ணாவிரதம் போன்றன தொடர்பில் நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் தம்பி தனராஜை அல்லவா இன்றைய நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். இது தப்புத்தானே தம்பி முஷாரப்?

சில வேளை இவ்வாறான செயற்பாடுகள் தனராஜை ஒன்றும் தெரியாத பயல் என்பது போல் அவமானப்படுத்துவது போன்றும் எண்ணத் தோன்றலாம் அல்லவா?

ஏதோ மஹஜன சம்பத் சீட்டிழுப்பில் ஒரு இலக்கமோ இரண்டு இலக்கங்களோ வெற்றி பெற்றால் 20 ரூபா, 50 ரூபா பரிசு கிடைத்த மாதிரிதான் அதிர்வில் தம்பி தனராஜின் அதிர்ஷ்டம்.. என்னத்தைச் சொல்லி.. என்னத்தை செய்ய…?

சரி…சரி…. போனது போகட்டும்… எதிர்காலத்தில் சற்று விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளுங்கள் தம்பி முஷாரப்.. – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்..

Related posts

பிக்குகளை அடக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் மாநாயக்க தேரர்கள்

wpengine

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

wpengine

வெள்ளத்தால் பாதிப்பு நிதி உதவி செய்த கூகுள் நிறுவனம்

wpengine