பிரதான செய்திகள்

ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கேட்டக வேண்டும் மெதகம தம்மானந்த தேரர்

அமைச்சர் ரவுப் ஹக்கீம் மகா சங்கத்தினரின் பலத்தை குறைவாக மதிப்பிட்டுள்ளதாக மல்வத்து அஸ்கிரிய பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஹங்குரன்கெத மற்றும் வலபனே ஆகிய மகா சங்கத்தினர் கலந்து கொண்ட விசேட நிகழ்வொன்று பதியபலல்ல மாலிகாதென்ன ஸ்ரீ போதி சத்வாராம விகாரையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே தேரர் இதனைக் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து சிறப்புரையாற்றிய தேரர்,

பௌத்த சமய பயங்கரவாதிகள் காவியுடை தரித்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். பிக்குகளின் பெயர் குறிப்பிட்டு அவர் பிக்குகளை இகழ்ந்துள்ளார்.

இதற்காகவே மகா விகாரை என்ற வகையில் அறிக்கை விட்டோம். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மன்னிப்புக் கோரியிருந்தார். நாம் அதனை மிகவும் வரவேற்கின்றோம்.

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் எமது நல்லெண்ணமொன்று இருக்கவில்லை. அவர் அஸ்கிரி – மல்வத்து ஆகிய மகாநாயக்கர்களையும், தியவடன நிலமேயையும் குறை கூறினார். நான் அவருக்கு எச்சரிக்கை விடுத்தேன்.

மகா சங்கத்தினருக்கு எதிராக குறை கூற வேண்டாம் என்று கூறினேன். எப்போதைக்காவது தங்களுக்காக இருப்பவர்கள் அவர்கள் மட்டும் தான் எனக் கூறினேன்.

இருப்பினும், தேரர் அதனை ஏற்காது செயற்பட்டதனால், சமூகவலைத் தளங்களில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக தவறான செய்திகள் பரவுவதற்கு ஏதுவானது.

இந்த மாநாடு தொடர்பிலும் பொலிஸாரினால் பாரிய தேடல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்தன. இருப்பினும், முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பில் பொலிஸார் எந்த தேடல்களையும் மேற்கொள்வதில்லை.

வடக்கு, கிழக்கில் மாத்திரம் சுமார் 400 பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுராத ஜயரத்ன எம்.பி. அறிவித்திருந்தார். அதன்போது இது போன்ற விடயங்களை இங்கு கதைக்க வேண்டாம் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறியிருந்தார்.

இதனால், தமிழ் இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார் என குறிப்பிட்ட தேரர், மகா சங்கத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டு அகங்காரத்துடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உழைக்கும் மக்களின் பணத்திற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்-அநுர குமார திசாநாயக்க

wpengine

ரணிலுக்கு தலையிடியாக மாறிய சஜித்

wpengine

வடக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மீள்குடியேற்றமே!

wpengine