Breaking
Fri. May 17th, 2024

இணைந்த வட கிழக்கில் முஸ்­லிம்­களின் உரி­மை­களும் பாது­காப்பும் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எது­வித அநீ­தியும் இழைக்­கப்­பட மாட்­டாது என்றும் சம்­பந்தன் ஐயா உத்­த­ர­வா­த­ம­ளித்­தி­ருக்­கின்றார்.

இவற்றை சம்­பந்தன் தனிப்­பட்ட முறையில் உறு­திப்­ப­டுத்­து­வாரா? அல்­லது த. தே. கூ உறு­திப்­ப­டுத்­துமா? அல்­லது அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­னூ­டாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுமா என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமீட் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­னூ­டாக முஸ்­லிம்­களின் உரி­மை­களை, பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தப்­பட முடி­யு­மானால் அதி­காரப் பகிர்­வுக்குப் பதி­லாக, அதே அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­னூ­டாக தமி­ழர்­களின் பாது­காப்பை, உரி­மை­களை ஏன் உறு­திப்­ப­டுத்த முடி­யாது என்ற கேள்­விக்கு சம்­பந்தன் ஐயாவின் பதி­லென்ன ?

தமி­ழர்­களின் பாது­காப்பை, உரி­மை­களை இலங்கை அரசு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­னூ­டாக உறு­திப்­ப­டுத்த முடி­யாது ஆனால் முஸ்­லிம்­களின் உரி­மை­களை வட கிழக்கு ‘தமிழ் அரசு’ அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­னூ­டாக உறு­திப்­ப­டுத்தும்.

எனவே முஸ்­லிம்கள் வட கிழக்கு இணைப்­பிற்கு இணங்க வேண்டும் என்­பது எந்த வகையில் நியாயம். அல்­லது தனிப்­பட்ட முறையில் சம்பந்தன் அவர்­களோ அல்­லது த. தே. கூட்­ட­மைப்போ உறுதிப் படுத்தும் என்­பது அறி­வு­டமை ஆகுமா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அதே உத்­த­ர­வா­தத்தை ரணிலோ, மைத்­தி­ரியோ தந்தால் அதி­கா­ரப்­ப­கிர்வுக் கோரிக்­கையை அவர்கள் கைவி­டு­வார்­களா? கடந்த கால, சம கால அனு­ப­வங்­கள்தான் எங்­களை அதி­காரப் பகிர்வைக் கோர­வைக்­கின்­றது என்று நீங்கள் கூறலாம். அதே கடந்­த­கால, சம­கால அனு­ப­வங்­கள்தான் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக எங்­களை அச்­சப்­பட வைக்­கின்­றது என்­பதைப் புரிந்து கொள்­ளுங்கள் .

அது­மட்­டு­மல்­லாமல் யாழில் நடை­பெற்ற இரு மாண­வர்­களின் கொலையைத் தொடர்ந்து அதி­காரப் பகிர்வின் மூலமே வட கிழக்கில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தப்­பட முடியும் என்று திரு சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அந்தக் கொலையை நாமும் கண்­டிக்­கின்றோம். ஆனால் கிழக்­கிற்கு வெளியே வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளது உரிமை, பாது­காப்பு அதே அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் பாது­காக்­கப்­ப­டுமா? அல்­லது மேலும் அதல பாதா­ளத்­திற்குள் தள்­ளப்­ப­டுமா?  சம்­பந்­தனின் பதில் என்ன?

வடக்கில் தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்­றார்கள் . எனவே அதி­காரம் அவர்­களின் கைக­ளுக்குச் செல்லும்.  கிழக்­கிற்கு வெளியே வாழு­கின்ற முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அதி­காரம் யாரின் கைக­ளுக்கு செல்லும்? போதாக்­கு­றைக்கு கிழக்கில் மாத்­திரம் பெரும்­பான்­மை­யாக இல்­லா­விட்­டாலும் சிறு­பான்மை இல்லை என்­கின்ற நிலையில் வாழு­கின்ற முஸ்­லிம்­களை வட கிழக்கை இணத்து இங்கும் சிறு­பான்­மை­யாக்கி ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும் அடிமைச் சமூ­க­மாக முஸ்­லிம்கள் வாழ, அதே நேரம் இணைந்த வட கிழக்கில் ஆளும் சமூ­க­மாக தமி­ழர்கள் வாழ்ந்து ஆளப்­ப­டு­கின்ற ஒரு அடிமைச் சமூ­க­மாக கிழக்­கிலும் முஸ்­லிம்­களை மாற்ற முற்­ப­டு­வது மனித தர்­ம­மா­குமா?

துர­திஷ்­ட­வ­ச­மாக அதி­காரப் பகிர்வு என்­பது முஸ்லிம் சமூ­கத்தின் மீது எழு­தப்­படப் போகின்ற அடிமைச் சாசனம் என்­பதை புரிந்­து­கொள்ள முடி­யாத முஸ்லிம் கட்சித் தலை­மைத்­து­வங்­களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

அந்த தலை­மைத்­து­வங்­களால் புரிந்து கொள்ள முடி­யாது, ஏனெனில் அவர்கள் முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களே தவிர முஸ்லிம்களின் தலைமைத்துவங்கள் அல்ல.

எனவே, சம்பந்தன் அவர்களே! நாங்கள் தலைமைத்துவமில்லாத ஒரு சமூகம் , தயவு செய்து எங்கள் மீது சவாரி செய்ய முற்பட வேண்டாம்.

ஒரு சமூகத்தின் வாழ்வு இன்னுமொரு சமூகத்தின் அழிவில் அல்லது அடிமை வாழ்வில் மலரவேண்டாம் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *