பிரதான செய்திகள்

யாழ்நகரில் இரு உணவகங்கள் நீதிமன்றால் சீல் வைப்பு!

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் யாழ் நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ் பஸ் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.

இரு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று புதன்கிழமை யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கினார். அத்துடன் வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.

Related posts

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 400 முறைப்பாடுகள் பதிவு

wpengine

வவுனியா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை அகற்றகோரிய சூத்திரதாரிகள்! றிஷாட் கண்டனம்

wpengine

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிம்

wpengine