Breaking
Fri. May 17th, 2024
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 4 ஆவது சபையின் 49 ஆவது கூட்டமர்வு நேற்று (29) மாலை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது சபை அமர்வின் ஆரம்பத்தில் மத அனுஸ்டானம் 2022 மார்ச் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2022 மார்ச் மாதத்திற்கான கணக்கறிக்கையை உறுதிப்படுத்தல் தவிசாளர் உரை என்பன இடம்பெற்றன.
அதன் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 6 உறுப்பினர்களும் இணைந்து கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருமான வை.எல். சுலைமாலெப்பை மாத்திரம் கருப்பு பட்டி அணியாது அரசாங்கத்தின் செயற்பாடுகள் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை அவதானிப்பதாகவும் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து ஏனைய சக உறுப்பினர்களின் தெரிவித்த கருத்துக்களுடன் உடன்படுவதாகவும் இதற்காக உடனடி தீர்வுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்க முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து சபை அமர்வில் கடிதங்கள் பிற விடயங்கள் ஆராயப்பட்டு சபை நடவடிக்கைகள் யாவும் நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்த்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *