பிரதான செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள், இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார்.
விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக நீதவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அவர், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியாகவும் கடமையாற்றியவராவார்.

இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24.12.2021

Related posts

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Editor

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

wpengine

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து தூதுவர் மன்னாருக்கு விஜயம்.

wpengine